Blog

Begining of EelamClub

EELAMCLUB பிறந்த கதையும் அதன் கருகிய வேர்களும்

    கடந்த நாற்ப்பது வருட யுத்தம் எமது மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வையும் சிதைத்து விட்டு, ஒரு படி கூட முன்னேற்றமில்லாத நிலையையே விட்டுச் சென்றுருக்கின்றது இதுவே யதார்தம்.தமிழ் தேசியம் பற்றியும், தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவது பற்றியும்  
அதற்கான போராட்டம் பற்றியும் நாம் அதிகம் கதைக்கின்றோம். ஆனால் முப்பது வருட ஆயுதப்போராட்டமும் சரி, யுத்தத்துக்கு பின்னரான 10 வருட ஜனநாயக அரசியலும் சரி இது வரை எவ்வித பாரிய முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்கு கொடுக்கவில்லை என்பதையும், விரைவில் பெற்றுக் கொடுக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையையே உணரக்கூடியதாக உள்ளது.    முப்பது வருட ஆயுதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர், பல லட்சம் தமிழர்கள் வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். 40 வருடத்தில் இருமடங்காக உயர்ந்திருக்க வேண்டிய தமிழர் சனத்தொகை, முன்பு இருந்ததை விட குறைவாகவே உள்ளது. தமிழர்களின் பிறப்பு வீதம் குறைந்துவிட்டது . வடகிழக்கில் உள்ள இளைய சமுதாயத்தினரும் சந்தர்பம் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர் அவர்களது புலம் பெயர் உறவுகளும் அதனை ஊக்குவிக்கும் முகமாகவே உள்ளனர்.

இளைய சமுதாயத்தின் இந்த மனநிலைக்கு காரணம், அவர்களை தாயகத்தில் தங்கியிருக்க செய்வதற்கான, அவர்களது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கான எந்த பொருளாதார அபிவிருத்தி திட்டமும், முன்யோசனையும் தமிழர் அரசியல் தலைமைகளிடமோ, மாகாணசபைகளின் தலைவர்களிடமோ இருப்பதாக தெரியவில்லை.

தொடர்ச்சியாக புலம் பெயர் தமிழர் தாயக உறவுகளுக்கு பண உதவிகளை வழங்கிவருகின்றனர். அவ்வாறான பண உதவிகளும் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்வதற்குப் பதிலாக பல நூறு இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச்செற்றுள்ளதை நாம் வடகிழக்கில் காணலாம்.

மறுமுனையில் பெண்களின் தலைமைத் துவக்குடும்பம்,லட்சக்கணக்கில் இளம் விதவைகள், அவர்களின் பொருளாதாரம், எதிர்கால வாழ்க்கை,பாலியல் பிரச்சனைகள் மற்றும் வறுமையில் வேலை வாய்பில்லாத நிலையில் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவேயுள்ளது.

வறுமையில் மதம் மாறுவதும் மாற்றப்படுவதும் வேகமாக நடந்து வருவதால் தமிழ் சமூகத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த மதங்ஙளைத்தாண்டிய சகோதரத்துவ உணர்வு கேள்விக்குள்ளாகி வருவதை வடகிழக்கில் தொடர்ச்சியாக காணலாம்.இவ்வாறான மத உணர்வுகள் தமிழ் அரசியல் தலைவர்களாளும் ஊக்கிவிக்கப்படுவதும் வருத்தமளிக்கிறது.


தமிழர் இருப்பை உறுதி செய்ய வேண்டிய முழுப்பொறுப்பும் உலகத்தமிழர் ஆகிய எங்கள் கையிலுள்ளது.எமது வடகிழக்கு தமிழர் கல்வித்தரத்தையும் வேலைவாய்ப்பையும் அதனூடான போதிய வருவாயையும் நாமே உறுதி செய்ய வேண்டும்.

அன்பான தமிழ் உறவுகளே காலங்கள் கடந்து கொண்டிருந்தாலும் வடகிழக்கு உறவுகளின் வாழ்வாதாரத்தை நாமே ஒன்றிணைந்து கட்டி எழுப்பியாக வேண்டும்.


உங்கள் ஒவ்வொரு ரூபாவையும் வடகிழக்கின் தொழில்களில் முதலீடாக பாருங்கள் உங்கள் பணம் சேமிக்கப்படுவதுடன் தமிழர்வாழ்வும் உயரும் தமிழர் நலனும் பேணப்படும்.


நன்கொடைகள் எப்போதும் நமது இனத்தை முன்னேற்றி விடுதலை செய்யாது.முதலீடுகள் ஒரு  பொருளாதார பலம் கொண்ட ஆரோக்கியமான தமிழ் சமூகத்தை நிச்சயம் உருவாக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தமிழனும் முடிந்த மூலதனப்பங்களிப்பை செய்து வடகிழக்கின் தேவைகளில் EelamClub.com  உடன் இணையவும்


நன்றி


சசி முருகேசு

நிறுவனர் 

Eelamclub.com