Founder Of Eelam Club

நான் சசி முருகேசு,யாழை பிறப்பிடமாகவும் வன்னி,வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட யாழ்/பல்கலைக் கழகத்தின் பழைய மாணவி.நான் வாழ்ந்த போர்ச் சூழல் மிகவும் இன்னல்கள் நிறைந்தது. மாறி மாறிய இலங்கை இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இடப்பெயர்வுகள் ,வீடு மற்றும் சொத்துக்கள் முற்று மழுதாக அழிந்து சொந்த மண்ணில் அகதியாக்கப்பட்டேன்.

உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வடகிழக்கு மாகாண மெங்கும் அரச,இராணுவத்தால் அமுலில் வைத்திருந்த பொருளாதார தடையில் போது உலக மனித நேய காவலரின் நாற்றம் பிடித்த மான்பைக் கண்டேன். 2009 வரை நீடித்த உள்நாட்டுப் போரில் தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் நண்பர்களின் உயிர் இழப்பு, கல்வி கற்க பாடசாலை இயங்க முடியாத நிலை. வன்னியில் நிலவிய போர் உக்கிரத்திலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களைத் தேடி அலைந்த நாட்கள். நான் வன்னியில் வாழ்ந்ததனால் பல தடவை மரத்தடி மாளிகையாகவும் இருந்தது. போவதற்கு இடம் இல்லாது அல்லது எங்கு போவது என்றே தெரியாது பஸ்சுக்கு மணிக் கணக்காக காத்திருந்த நாட்களும் மறந்தோ கடந்தோ போகமுடியாதவை.

வன்னியில் நிலவிய பொருளாதார போக்கு வரத்து தடை, இயற்கை அனர்த்தம், நோய்த்தொற்று, மருத்துவப் பற்றாக்குறை நிலவியபோதும் வாழக்கையின் மீதான நம்பிக்கை என்னை வழி நடத்தியது.காலம் பல்கலைக்கழுக கதவை திறந்தது. நான் சார்ந்த யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகம் தமிழ் தேசிய விடுதலைக்காகவும் வட கிழக்கின் பொருளாதாரத்திலும் தமது பங்களிப்பை எப்போதும் சமரசமற்று துணிவுடன் கடந்த 40 வருடமாக முன்னின்று வழங்கி வருகின்றது.

2009 ஆண்டிற்கு முன்னரும் பின்னரும் வடகிழக்கு கல்வி சமூகம் புலன் பெயர் நாடுகளில் இருந்து இன விடுதலைக்கு காத்திரமான பங்கை ஆற்றி வருகின்றது. அவ்வாறே நானும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எனது பல்கலைக்கழக நண்பர்கள், பாடசாலை நண்பர்கள் உறவினர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் உலகத்தமிழ் உறவுகளின் பங்களிப்போடு நான் வட கிழக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கான உழைத்து வருகின்றேன்.

தமிழக,புலம்பெயர், மற்றும் உலகத்தமிழ் சமூகம் வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தில் அக்கறை கொண்டுள்ளது. வடகிழக்கு மக்களின் பாரம்பரிய தொழில்,விவசாயம்,கடல் சார்,வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் துறை சார்வல்லுனர்களின் உதவியுடன் வடகிழக்கில் தனிநபர்,குடும்பபொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு Eelamclub நிறுவனம் இயங்கி வருகின்றது. அவ்வாறே ஒவ்வொரு தமிழரிடமிருந்தும் சிறிதும் பெரிதுமாக முதலீடுகளை எதிர்பாக்கிறோம்.

BY THE TAMILS, FOR THE TAMILS, OF THE TAMILS

நன்றி

சசி முருகேசு


Create A Living Trust

நன்கொடை வேண்டாம்.அன்பளிப்பு வேண்டாம்.அனுதாபம் வேண்டாம்.இலவசம் வேண்டாம்.

சசி முருகேசு, நான் யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவி. சிறு வயதில் இருந்தே இன்னல்கள் போராட்டங்கள் நிறைந்த போர்ச்சூழலில் வாழ்ந்து வந்துள்ளேன். உலகில் மனித இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிக முக்கியமான இன அழிப்பை இலங்கையில் நடத்தியவரும் துணை நிற்பவரும் இன்றும் மனிதநேயம் மனித உரிமை என வலம் வருவதை காண்கிறோம். இலங்கைத்தமிழர் எதிர் நோக்கிய இடப்பெயர்வுகள் அதனால் உண்டான விளைவுகள் அனைத்தையும் பார்த்தது மட்டுமன்றி அனுபவித்தும் வந்துள்ளேன்.. 2009 வரை மாணவர்களாய் சேர்ந்து நம் உறவுகளுக்கு சிறு சிறு உதவிகளை செய்தோம்.

இன்று உலகெங்கும் என்னைப் போல வடகிழக்கு மக்களின் நல்வாள்வில் அக்கறை கொண்ட உலக தமிழ் உறவுகள் இணைந்து Eelamclub-web bank ஊடாக மேற்கொண்டு வரும் சிறு சுய தொழிற்கடன்,மாணவர் கல்விக் கடன் மற்றும் நேரடி முதலீடுகள் எதிர்கால நம்பிக்கையை தருகின்றது.

நான் இலங்கையில் இருக்கும் போது எனக்கு இவ்வாறன ஒரு முயற்சி தோன்றவும் இல்லை தோன்றுவதற்கான சூழ நிலை அமையவும் இல்லை. 2009 நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வாழ்ந்த காலப் பகுதியிலே EELAM CLUB என்னும் நிறுவனத்தை உருவாக்கும் எண்ணக்கரு மனதில் தோன்றியது. இருந்தும் நான் அமெரிக்கா வந்த பின்னரே இதற்கு முழுமையான செயல் வடிவம் கொடுக்க முடிந்தது.

Eelamclub இன் வளர்ச்சிக்கு உலக நாடுகளில் உள்ள தமிழர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. எங்களுடைய இந்த ஒத்துழைப்பு வடகிழக்கு தமிழர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் விருத்திக்கும் ஊன்று கோலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. உலக நாடுகளில் வாழும் நாம் Eelamclub web bank மூலம் செய்யும் முதலீடானது "நன்கொடையல்ல, அன்பளிப்பும் அல்ல,” உங்கள் சேமிப்பு. உங்கள் முதலீடு.

Eelamcub இல் மேற்கொள்ளும் முதலீடானது பங்குப்பத்திரமாக அல்லது கடன் பத்திரமாக உங்கள் கையில் இருக்கும். உங்களுக்கு நிதித்தேவை ஏற்படும் போது Eelamclub விதியின் அடிப்படையில் பங்கு பத்திரத்தையோ கடன்பத்திரத்தையோ மற்றும் ATM இயந்திரம் உடாக நிதியாகவும் அவசர தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். அல்லது வேறு ஒருவருக்கு கை மாற்றிக்கொள்ளலாம் .

எனவே நீங்கள் Eelam club நிறுவனத்தில் மேற்கொள்ளும் முதலீடு சேவை நோக்குடன் கூடிய இலாப நோக்கில் வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணத்தமிழரின் தேவைகளில் மீது முதலீடு செய்வதுடன் தமிழகத்தில் குறிப்பிட்டத்தக்க வியாபார சிறு கடன்களையும் வழங்கி வருகிறோம். இவை நீண்ட குறுகிய கால வட்டி இல்லாக்கடனாகவும் மேலும் 1% ,2% வட்டியுடன் வழங்கப்படுகிறது.சிறு சுய தொழிலுக்கான கடனை வழங்கப்படுவதுடன்,நேரடியாகவும் துறைசார் வல்லுனர்களுடன் இணைந்து பல்வேறு முதலீடுகளை Eelam club நிறுவனம் மேற்கொள்கிறது.

நமக்கான ஆரோக்கியமான தேசத்தை கட்டி எழுப்புவது முழுக்க முழுக்க உலகதமிழர் கையிலுள்ளது.அதே நோக்கம் கொண்டு இயங்கிவரும் Eelamclub உடனும் இணைந்து கை கொடுத்து நிக்குமாறு உரிமையுடன் கேட்கிறோம்.

நாம் தமிழராய் இணைந்து நம் தேசத்தை கட்டி ஏழுப்புவோம்.

சசி முருகேசு

நன்றி