Blog

TamilE Tea - It's a Ceylon Tea from Srilanka

10% இலாபம் தோட்ட தொழிலாளரின் நல் வாழ்விற்கு!

ஊலகின் முதல் தர தேயிலையை உருவாக்கியவர்கள்,உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். Ceylon Tea உலகின் சிறந்த தேயிலையாக இன்றும் உள்ளது.ஆனால் கடந்த 150 ஆண்டுகளாக நம் தமிழரின் வாழ்க்கை தரமானதாக இல்லை.நிரந்தர இருப்பிடத்தையோ அடிப்படைச் கூலியைப்யோ பெற்றுவிட வில்லை.மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியும் நாள் கூலியாக 1000/= வத்தாண்ட முடியாத அவல நிலையில் இன்றும் நின்று கொண்டிருக்கின்றார்கள்.



ஏன் இந்த நிலை கடந்த 150 ஆண்டுகளாக தொடர்கிறது.தமிழர் அல்லாதோர் தேயிலை முதலாளிகளாக இருப்பதும்,நம் தமிழர் இடையே நீண்ட காலம் நிலவிய அரசியல் அறியாமையுமே அன்றும் இன்றும்  இவ் அவலத்துக்கு காரணம்.

 உலகில்10 கோடி தமிழர் இருந்தும் ஓவ்வொரு தமிழனும் காலையும் மாலையும் தேநீருக்கு அடிமையாகி  இருந்தும் உலகத்தமிழ் உலகம் தேயிலைத்தோட்ட தொழிலாளரை  அவர்கள் உணர்வுகளைக் கண்டு கொள்ளவில்லை.தமிழர் வாழ்வில் தவிர்கமுடியாத கலாச்சாரமாக ஆகி விட்டது தேநீர்,இருந்தும்  தேயிலை வியாபாரத்தில் தமிழரின் பங்களிப்பு குறிப்பிடும் படியாக இல்லை. நமக்கான அடிப்படை சந்தை வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளதுடன் இன உணர்வும் வளர்ந்து வரும் இன்றைய நாட்களில் தமிழி (TamilE Tea) சந்தை வாய்ப்பு  வரும் காலங்களில் மேலும் சிறப்புறும்.

நாம் மலையக தேயிலைத் தோட்ட வேலையாட்களாக உள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தில் அக்கறைகொண்டுள்ளோம்.தமிழி நிறுவனம் தொடங்கப்பட்டதன் முதன்மை நோக்கமாக அவ் தோட்ட தொழிலாளரின் நல்வாழ்விற்கு நம்  பங்களிப்பை செய்கின்றோம்.

அந்த வகையில் தமிழி தேயிலை வியாபாரம் மேற்கொள்ளும் நிகர இலாபத்தில் 10% தேயிலைத்தோட்ட தொழிலாளரின் எதிர்கால நலன்களுக்காக கொடுக்கப்படும் அல்லது நேரடியாக செலவு செய்யப்படும்.

அன்பான தமிழ் உறவுகளே தமிழ தேயிலையை முழுமையாக சந்தைப்படுத்த மேலதீக மூலதனம் வேண்டி பங்குபத்திரங்களை விற்று வருகிறோம்.நீங்களும் உங்கள் தகமைக்கு ஏற்ப பங்களிப்பு செய்து தமிழி தேயிலையின் உரிமையாளராக நல்லுள்ளம் கொண்டு வரவேற்கிறோம்.

நன்றி
சசி முருகேசு