Blog

TamilE
It's a Ceylon Tea.The best Tea in the World.
இது EelamClub நிறுவனத்தின் ஓர் அங்கம்.
 கடந்த 150 ஆண்டுகளாக நம் தமிழ் உறவுகள் இலங்கையின் தேயிலைத்தோட்டத்தில் பல்வேறு முதலாளிகளுக்கும் அடிமைகளாக தம் உழைப்பை மட்டும் கொடுப்பதற்காகவே வாழ்ந்து வருகின்றனர். இலங்கைப்பூர்வீகத் தமிழரும் சிங்களத்தின் சாணக்கியத்தில் அறிவிழந்து மலையகத்தமிழரைப் புறக்கணித்தனர். இன்நிலை 1980 வரை நீடித்தது. பின்னாளில் இலங்கையின் அரசியல்களம் மாறிப்போனது.ஆனாலும் மலையகத்தமிழரின் வாழ்க்கையில் நல்லதே நடக்கவில்லை.
நாம் இன்று தமிழி தேயிலை நிறுவனத்தை ஆரம்பித்துள்ளோம்.இது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே நம் மலையக தமிழ் உறவுகளுக்காகவே.
நமது தமிழி தேயிலை மூலமாக கிடைக்கும் நிகர வருவாயில் 10% இலாபத்தை மலையக தோட்டத்தொழிலாளருக்கு நேரடியாகக்கொடுப்பது என்ற ஒரே நோக்கோடு ஆரம்பித்துள்ளோம்.
உலகெங்கும் 13 கோடித்தமிழர் காலையும் மாலையும் தேநீரில் வாழ்ந்தாலும் ஏன் தேயிலைத்தோட்டத்து நம் உறவுகளின் வாழ்வு செழிக்கவில்லை.
தேயிலை வியாபாரத்தில் அன்னியநிறுவனங்களே இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ளதாலும் தமிழர் வெறும் நுகர்வோராகவே இருப்பதாலும் அடிமைத்தனமும் அறியாமையும் தொடர்கிறது.
கீழே சில இலங்கையில் உள்ள தேயிலை நிறுவனங்கள்.
Lipton - UK
Tetley -Tata kolkata
Twinigs - UK
Dilmah - Srilankan sinhalies
Bushells and Liton -Australia
Madame -Australia
T2 -Australia
Akbar -UAE based in Srilanka
Alghazaleen Tea -Amman
Heladiv -Dutch
Steuarts tea -UK
Mlesna Tea -Euro and more
நாம் தமிழராக இணைந்து குறைந்தது நம் தமிழ்ச்சமூகத்திற்கு தேவையான தேயிலையின் தேவையின் 1% பயன் படுத்த தொடங்கினாலும் தோட்டத்தொழிலாளரும் தமிழி நிறுவனமும் நலன்பெறும்.
நாம் தேயிலையின் தரத்தில் எந்தவிதத்திலும் சமரசம் செய்யவில்லை.இலங்கையில் கிடைக்கும் மிகமிகத் தரமான தேயிலையை நமது தமிழியும் தயாரிக்கின்றது.